நாரதர் புராணம்: By Praveen Kumar G (Tamil Edition) por Praveen Kumar G

நாரதர் புராணம்: By Praveen Kumar G (Tamil Edition) por Praveen Kumar G
Titulo del libro : நாரதர் புராணம்: By Praveen Kumar G (Tamil Edition)
Fecha de lanzamiento : February 14, 2017
Autor : Praveen Kumar G
Número de páginas : 89

Obtenga el libro de நாரதர் புராணம்: By Praveen Kumar G (Tamil Edition) de Praveen Kumar G en formato PDF o EPUB. Puedes leer cualquier libro en línea o guardarlo en tus dispositivos. Cualquier libro está disponible para descargar sin necesidad de gastar dinero.

Praveen Kumar G con நாரதர் புராணம்: By Praveen Kumar G (Tamil Edition)

நாரதர் புராணம்

Pages - 125


நாரதர் அல்லது நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான ஞானிஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், ராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளைப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூலே வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும் முறைகளை விளக்கியுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்நூல் மிகவும் முக்கியமானது, காரணம் அவர்களும் இதே நாரதக் குருப் பரம்பரையில் வந்தவர்களே. நாரதர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு தம்புராவும் வைத்திருப்பார். நாராயண நாமத்தை சர்வ காலமும் சொல்லும் இவரது பக்திக்கு ஈடுஇணை கிடையாது. பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தருமசாச்திரத்தையும் இவர் வழங்கியுள்ளார். இதுவே துறவறம் மற்றும் தவத்தின் முறைகளை எடுத்தியம்புகிறது.

இவர் பிரம்மாவின் மானச புத்திரனாக கருதப்படுகிறார். முற்பிறவியில் கந்தர்வனாக பிறந்த இவர், ஒரு சாபத்தால் அடுத்தப்பிறவியில் ஒரு முனிவரின் வீட்டில் பிறந்தார். அங்கு விஷ்ணுபுராணத்தைப் படித்து தேர்ச்சிபெற்ற இவர் பின்பு பரமாத்மாவை நினைத்து தவமிருந்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றார். விஷ்ணுவின் ஆசீர்வாதத்தால் நினைக்கும் பொழுது அவரது தரிசனம் பெறும் பாக்கியத்தையும் பெற்றார்.

இவர் கந்தர்வகுலத்தில் பிறந்து ரிஷியானதால் இவரை தேவரிஷி என்று வேதங்கள் கூறுகின்றன. விஷ்ணு புராணத்தின் படி பன்னிரண்டு மகாஜனங்களில் இவரும் ஒருவர். நாரதர் காலங்களையும் லோகங்களையும் கடந்து செல்லக்கூடியவராகவே எல்லா புராணங்களும் கூறுகின்றன. எனவே அவரை திரிலோகசஞ்சாரி என்றும் அழைப்பர். போகும் இடங்களில் கலகங்களை தொடங்கிவைப்பதால் இவரை கலகப்பிரியர் என்றும் கூறுவார்.